Gosala History

 

கோசாலை வரலாறு

கோசாலை அல்லது பசுமடம்

பாரத வர்ஷத்தில் வேத காலத்திலிருந்தே விவசாயமும் கால்நடை வளர்ப்பும் ஒன்றையொன்று சார்ந்திருக்கும் தொழில்களாகவே உள்ளன. எருதுகளும் காளைகளும் நிலத்தை உழவும்,வயலுக்கு நீர் பாய்ச்சவும், விளைச்சலைச் சந்தைக்குக் கொண்டு செல்லவும் உணவுப் பொருட்களையும், மற்ற துணை உற்பத்திப் பொருட்களையும் பதப்படுத்தவும் உபயோகிக்கப் பட்டுள்ளன. விவசாயத்தின் துணை உற்பத்திப் பொருட்கள் கால்நடைகளுக்குத் தீவனமாக ஆகியுள்ளன. கால்நடை வளர்ப்பின் துணை உற்பத்திப் பொருட்கள் விவசாயத்துக்கு உரமாகியுள்ளன. இந்த இயற்கையான உயிர்ப் பொருளாதாரச் சுழற்சியில் மிகவும் பயனடைந்தது மனிதர்களே.

பிரிட்டிஷ் ஆட்சியின் நாசம்

இந்தியாவை மதம் மாற்றப் புறப்பட்ட கிருஸ்டோபர் கொலம்பசுக்கு பாரத வர்ஷத்துக்கு வழி தெரியவில்லை. கடைசியாக ஐரோப்பியர்கள் பாரத் வர்ஷத்தை வந்தடைந்தபோது இந்தியாவில் மனிதர்களைவிடப் பசுக்கள் அதிகமாக இருப்பதைக் கண்டார்கள்.பெரும்பான்மையான இந்தியர்களுக்கும், பெரும்பாலான ராஜ்ஜியங்களுக்கும் விவசாயமே வருமானத்துக்கான ஆதாரமாக இருந்தது.இவையெல்லாமே வேதத்தில் சொல்லப்பட்ட கடவுள் பிரக்ஞைக்கு நெருக்கமான தொடர்புடையது. பாரத வர்ஷத்தில் விவசாயத்துக்கும்,கால்நடை வளர்ப்புக்கும் இப்படியான பொருளாதார மற்றும் ஆன்மிக முக்கியத்துவம் இருந்தது.
நம்முடைய கடவுள் பிரக்ஞையை மெதுவாகக் கொன்று தங்களுடைய மதக் கருத்துகளைப் பரப்புவதற்காக அவர்கள் எடுத்த முக்கிய நடவடிக்கை பசுக்களைக் கொல்லத் தொடங்கியதுதான். தினந்தோறும் 30,000 பசுக்களையும், எருதுகளையும் கொல்வதற்காக நகர் தோறும் கசாப்புக் கட்டிடங்களைத் திறந்தான் ராபர்ட் கிளைவ். நால்நடைகளின் எண்ணிக்கை குறையத் தொடங்கியதும் உழுவதற்கும், விளைச்சலைச் சந்தைக்குக் கொண்டு செல்லவும் உணவுப் பொருட்களையும், மற்ற துணை உற்பத்திப் பொருட்களையும் பதப்படுத்தவும் முடியாமல்லும் உரமின்றியும் விவசாயம்சிரமப்பட ஆரம்பித்தது.விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பிலிருந்து தினப்படி வருமானம் குறைய ஆரம்பித்ததும் இந்தியர்கள் பிழைப்புக்காக தொழிற்சாலைகளுக்கும் அரசாங்கத்திலும் வேலைக்குப் போக ஆரம்பித்தார்கள்.

சுயராஜ்ஜியத்தின் நாசம்

சுதந்திரத்துக்கு முன்னால் முகலாயர்களும்,ஐரோப்பியர்களும் பசுக்களையும் விவசாயத்தையும் கொன்றார்கள் என்றால், சுதந்திரத்துக்குப் பின்னர் நம் தலைவர்களும், அறிவியல் தொழிநுட்ப வல்லுனர்களும் பசுமைப் புரட்சி என்ற பெயரில் ரசாயன உரங்களையும் பூச்சிக் கொல்லி மருந்துகளையும் உபயோகித்து நிலத்தையும்,உயிர்ச் சூழலையும் கொல்லத் தொடங்கினார்கள்.
முதலில் நம்முடைய விவசாயத்துக்கும், கால்நடை வளர்ப்புக்கும் பின்னால் இருந்த ஆன்மிகக நோக்கம் கொல்லப்பட்டது.பின்னர் விவசாயம் செய்யவும், கால்நடை வளர்ப்புக்கும் தேவையான திறன் கொல்லப்பட்டது. தொடர்ந்து விவசாயத்துக்கும், கால்நடை வளர்ப்புக்கும் தேவையான சௌகரியங்கள் கொல்லப்பட்டன. கடைசியாக இப்போது இவற்றில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணத்துக்கே சுருக்குக் கயிறு வந்துவிட்டது. கறவை நின்ற பிறகு மாடுகளைக் கசாப்புக்கும், தோல் பதனிடும் தொழிற்சாலைகளுக்கும் அனுப்புவதற்காக ஜரூராக லாரிகளில் ஏற்றி விடுகிறார்கள்.
விவசாயம் செய்ய விரும்பாத விவசாயிகள் தங்கள் நிலங்களை வீட்டு மனைகளாகவும், தொழிற்சாலை நிலங்களாகவும் ஆக்கிவிடுவதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.விவசாயம் செய்ய விரும்பும் விவசாயிகளுக்கு நிலங்கள் தொடர்ந்து துண்டாடப்பட்டுச் சிறிதளவு நிலமே எஞ்சியிருக்கிறது. பாரத வர்ஷம் என்பது இப்போது வேதப் புத்தகங்களுக்கு என்று ஒதுக்கப்பட்டு விட்டது. வேத,புராணப் புத்தகங்கள் பழங் கதைகளாக ஆக்கப்பட்டுவிட்டன.பாரத வர்ஷம் இப்போது இறைச்சிக் கடையாகிவிட்டது.

தற்போதைய தேவை

நம் தினப்படி வாழ்வு முறையில் விவசாயத்தையும், கால்நடை வளர்ப்பையும் மீண்டும் கொண்டுவருவது நாட்டுக்கு நலம் பயப்பதாக இருக்கும். இன்றைய நிலவரத்தில், ஒன்றோடொன்று தொடர்புடைய இந்தச் செயல்களின் மூலம் நிலையான பொருளாதார அமைப்பைக் கட்டமைக்கவும் இது வழிகோலும்.
நம் ஆன்மிக அடையாளத்தை மீண்டும் நிலநாட்டுவதற்காகப் பல அருமையான ஆத்மாக்கள் புதுமையான பல முயற்சிகளை பாரதம் முழுக்க மேற்கொண்டுள்ளன. கோ ரக்ஷனா சமிதி (GRS) அவ்வாறான முயற்சியை மேற்கொண்டுள்ள ஒரு லாப நோக்கமற்ற அமைப்பு. இது தளர்ந்துபோன தன்னலமற்ற இந்த பசுக்களை அவற்றின் கடைசி காலத்தில் காப்பாற்றும் ஒரு முயற்சி. இதற்காக திருவாரூர் மாவட்டத்திலுள்ள குடவாசல் தாலுக்கா திருவீழிமிழலை கிராமத்தில் கோசாலை 2010ம் ஆண்டு அமைக்கப்பட்டது.
கோசாலைக் கட்டுமானம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே, கோ ரக்ஷணா சமிதி உள்ளூரில் இருந்த வயதான, காயம்பட்ட மாடுகளுக்குச் சிகிச்சையளித்தும்,பேணிப் பாதுகாத்தும் தன் பணியைச் செவ்வனே செய்ய ஆரம்பித்திருந்தது. நலம் விரும்பிகளின் ஆதரவாலும், நன்கொடைகள் மூலமாகவும் ஜுன் 04, 2012இலிருந்து கோவிந்தபுரம் மஹாத்மா குருராஜர் விட்டல்தாஸ் மகராஜ் அவர்களின் ஆசிர்வாதத்தில் செயல்பட ஆரம்பித்துவிட்டது 30 பசுக்களோடு செயல்படத் தொடங்கிய இந்தக் கோசாலையில் தற்போது 120க்கும் மேலான பசுக்களும் காளைகளும் பராமரிக்க படுகின்றன

HISTORY OF GOSALA

GOSALA OR PASU MADAM

Right from Vedic Time, in Bharata Bhumi both agricultural farming activity and the cattle growing practices have remained as a mutually depended cottage industry. In those old days, bulls and male calf’s have been regularly used in:
– Plaguing of lands ( in the place of power driven tractor of these days)
– To raise water from wells ( in the place of bore well pipeline pumps of these days)
– To transport various field yielded products to markets ( in the place of diesel driven trucks of these days)
– To process food to food ancillary item ( in the place of, example, high speed oil mill extraction of oil from seeds)
Agricultural yield by products, have remained as main cattle feed in healthy way. It is the mankind which has been receiving maximum benefit from this natural organic based economic life cycle process.

DESTROCTION DURING BRITISH RULE:

It is fist Mrs.CHRISTOBER COLOMBUS, who left his country, towards India to convert the religion of all Indians. But God’s grace however he could not find way to reachIindia.
In these attempts by westerners, it is Europeans who could reach India at last to start doun falling of out inter-dependent organic farming industry. They have found that there were more cows in our land than human beings. In those days for many state Governments of India and for majority Indians, it was agricultural farms based income, which has remained as main source of earning. These activities had close link to “GOD AWARENESS” as has been said in Vedic literature.
In this way, in Bharat Bhumi, a high significance remained for agri-farm of cattle growth activities, from point of view of economic welfare and religious sentiment. In this country Bhumi is call Bhuma Devi or Bhuma Matha and Cow as “GO MATHA” both the Mathas that is mothers were treated respectfully with dignity and pride.
The fist and important action initiated by Europeans to erase God sentiment from Indian mind was to start killing the Cows.
“ROBERT CLIVE” had opened butcher out lets in all cities and towns of our country to kill to the tune of about 30000 cows and bulls each day. This has, as expected, resulted in drastic decrease in cattle population. Consequently severe shortfall resulted in animal being not available for conventional land plugging, to transport farm products, and to process agri products to prepare various by products.
Most essentially severe drop occurred in organic base land feed, that is bio-fertilizers. As expected agricultural activity got in to severe trouble, leading to massive drop in agri-based income to cores of Indian people. Obviously they had to choose to become industrial worker in factories and mills to become government staff in British run offices.

REPUBLIC GOVERNMENTS DESTROCTIVE POLICY:

Before independence it was Europeans and Muslims who destroyed cows and organic agri activities. However after independence by August 1947, and up to till now, it is our political leaders and technical cum scientific experts who take over the destruction process. They jointly in the name of “GREEN REVOLUTION”, brought in various new rules which accelerated the destruction process of both of our healthy agri cultivations and cattle industry.