அருகம்புல் பொடி

பொருட்கள்

அருகம்புல், மிளகு, சீரகம், கருப்பு உப்பு.

உபயோகிக்கும் முறை

காலையில் வெறும் வயிற்றில் 200விறீ வெந்நீரில் 2 டீஸ்பூன் கலந்து பருகவும்.

பலன்

அருகம்புல் ஒரு மருத்துவ மூலிகையாகும். வாதம், பித்தம், கபம் ஆகிய முக்குற்றங்களினால் உண்டாகும் நோய்கள், கண் குகைச்சல், குருதி பித்தம் ஆகியவற்றிக்கு நல்லதெரு மருந்து, உடலில் வியர்வை நாற்றம் போக்க, உடல் அரிப்பை போக்க, வெள்ளைப்படுதல் நீங்க மருந்தாக

பல் பொடி

பொருட்கள்

கார்பன், ஆலம் விழுது, வேப்ப இலை, தும்பைபூ, கருப்பு உப்பு போன்ற பொருட்களால் நமது கோ சாலையில் தயாரிக்கப்பட்டது.

உபயோகிக்கும் முறை

முதலில் நடு விரலால் இடது கடவாய் பல் முதல் வலது கடவாய் பல்வரை மேல் மற்றும் கீழ் பற்களை தேய்க்க வேண்டும். இரண்டாவதாக நடுவிரல் மற்றும் ஆள்காட்டி விரலால் எல்லா பற்களையும் மெதுவாக தேய்த்து விடவும். மூன்றாவதாக ஆட்காட்டி விரல் மற்றும் நடுவிரலால் நாக்கின் மேல் புரத்தில் தேய்க்கவும். நான்காவதாக கட்டை விரலால் மேல் அன்னத்தில் தேய்க்கவும். பிறகு நன்கு வாயை கொப்பளிக்கவும்.

பலன்

பல் சொத்தை, பல் வலி, ஈரில் ரத்தம் கசிதல், வாயில் குழகுழப்பு தன்மை, வாய்துர் நாற்றம் இவை அனைத்தும் போக்கும்.

ஸ்நானப் பொடி

பொருட்கள்

பயத்தம் மாவு, கடலை மாவு, திருநீறு, வேப்ப இலை, வில்வ இலை, துளசி, வெட்டி வேர், செண்பகப் பூ, சிச்சனக் கிழங்கு, இஞ்சி, ரோஜா, தவனம், மருதும் மற்றும் பல மூலிகைகள் கொண்டு செய்யப்பட்டது.

உபயோகிக்கும் முறை

ஒரு டியூஸ்பூன் பொடியை நீரில் குழைத்து பசை போல உடல் முழவதும் தேய்த்து குளிக்கவும்.

பலன்

நமது உடல் கோடனகோடி செல்களால் உருவானது அந்த செல்கள் தினசரி ஆயிரக்கணக்கணக்கில பிறக்கவும், இறக்கவும் செய்கின்றன உதாரணமாக நீங்கள் சோப்பு போடாமலும் எந்த ஒரு பொருட்களை கொண்டு உடம்பை சுத்தம் செய்யாமல் நன்கு குளித்து விட்டு, நன்கு காய்ந்த கதர் துணியால் உங்கள் உடம்பை நன்றாக துடைத்து விட்டு அதை ஒரு பக்கெட்டில் அலசி பார்த்தால் வெண்மையான அழுக்குகள் மிதக்கும். இதுவே இறந்த செலகள் ஆகும். சாதாரணமாக சோப்பு போட்டு குளிக்கும் போது அதில் உள்ள ரசாயண குழைவு தன்மையானது செல்களுக்கு இடையில படிந்து இறந்த செல்களை வெளியே வரவிடாமலும், புதியதாக பிறக்கும் செல்களை நல்ல வளர்ச்சி இல்லாமலும், வளர்வதற்கு இடம் இல்லாமலும் வளர்ச்சி இல்லாமலும் பிறக்கின்றன. இதனால் பலதரப்பட்ட தோல் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. நமது குளியல் பொடி இயற்கை பொருட்களை கொண்டு சொர சொரப்புடன் இருப்பதால் உடலுக்கும், தோலிற்கும் மனதிற்கும் ஆரோக்கியத்தை கொடுக்கும்.

விபூதி & திருநீறு

பொருட்கள்

நாட்டு பசு மாட்டின் சாணம், கருக்கா, திருநீறு பட்டை செடி.

உபயோகிக்கும் முறை

காலையும், மாலையும் நெற்றி, இடுப்புக்கு மேல் உள்ள மூட்டு இணைப்புக்கள் மற்றும் எங்கு அரிப்போ, பூச்சிக்கடியோ ஏற்படும் இடங்களில்.

பலன்

தலையில் உள்ள நீரை இழுக்கும் இரண்டு முட்டிகளுக்கும் நடுவில் உள்ள மஜ்ஜையை பலப்படுத்தும் அரிப்பு, எரிச்சல், பூச்சிக்கடி பட்ட இடத்தில் திருநீறு கொண்டு தேய்த்தால் குணமாகும். தண்ணீர் சுத்தமாக இல்லை யென்றால் அதில் இரண்டு சிட்டிக்கை விபூதியை போட்டு வைத்திருந்து 15 நிமிடங்கள் கழித்து பருகினால் நீரின்மூலம் ஏற்படும் கிருமி தொற்று நோய்கள் தடுக்கப்படும். நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காயம் ஏற்படாமல் அது ஆற காலம் எடுத்துக்கொள்ளும், அந்த காயத்தில் விபூதியை பூசி வந்தால் எளிதில் காய்ந்து விடும். அம்மை தழும்பு மறையாமல் இருப்பவர்களுக்கு நமது விபூதியை குழம்பாக பிசைந்து பூசி வர தழும்புகள் மறையும்.

குங்குமம்

பொருட்கள்

இயற்கை குண்டு மஞ்சள், வெங்காரம், படிகாரம், எலுமிச்சை பழம்.

உபயோகிக்கும் முறை

இரண்டு புருவங்களுக்கு மத்தியிலும் நெற்றிக்கு மத்தியில் இட்டுக் கொள்ள வேண்டும்.

பலன்

எதிரில் வருபவர்களின் பார்வை திருஷ்டி மற்றும் பில்லி, சூன்யம் இவைகளை போக்கும். நடுவகிடில் எவ்வளவு நீளமாக குங்குமப் பொட்டுகளை வைக்கிறோமோ இவ்வளவிற்கும் கணவனின் ஆயுட்காலம் கூடும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.

இயற்கை தூபம் (கம்யூட்டர் சாம்ராணி)

பொருட்கள்

பசும் சாணம் பொடி ஐந்து வகை சாம்ராணி, குங்குலியம், வெட்டி வேர் மற்றும் இதர இயற்கை நறுமன மூலிகைகள் கொண்டு செய்யப்பட்டது.

உபயோகிக்கும் முறை

பூஜை நேரங்கள் மற்றும் இரவு தூங்கும் போது. பலன்: சாதாரண கம்யூட்டர் சாம்ராணியில் நிலக்கரி சேர்ப்பதால் அதில் இருந்து கார்பன் மோனாக்சைடு உற்பத்தி ஆகிறது. இது நேரடியாகவே நமது இரத்த நாளாங்களையும், மூளையையும் பாதித்து இறப்பிற்கே வழிவகுக்கும். நமது தூபம் சாணத்தால் செய்வதால் ஒரு வேள்வி செய்த பலன் கிடைக்கும் மற்றும் காற்று மண்டலத்தில் உள்ள கிருமிகளை ஒழிக்கும், நறுமணம் மன அமைதியை தரும்.

கருவேப்பிலை பொடி

முருங்கை பொடி

பொருட்கள்

இயற்கை கருவேப்பிலை, மிளகு, சீரகம், கருப்பு உப்பு.

உபயோகிக்கும் முறை

இதை சாதத்துடன் கலந்து சாப்பிடலாம். நீர் மோருடன் இதை கலந்து பருகலாம்.

பலன்

உடம்பிற்கும் புத்துணர்ச்சி ஏற்படும். இதை தினமும் உபயோகப்படுத்தினால் தலைமுடி வளரும் கண் குளிர்ச்சி அடையும். கருவேப்பிலை மருத்துவ குணம் நிறைந்தது. உடப்பிற்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது. கருவேப்பிலை பொடியை சாப்பிடுவதால் கேன்ஸர் வருவதை தடுக்கலாம் என லீனே கோபியாக் என்ற ஆஸ்ரோலிய விஞ்ஞானி கூறியுள்ளார்.

பொருட்கள்

முருங்கைக்காய் பொடி, மிளகு, சீரகம், கருப்பு உப்பு.

உபயோகிக்கும் முறை

இந்த பொடியை சாதத்துடன் கலந்து சாப்பிடலாம். இதை சூப்புடன் விவீஜ் செய்து சாப்பிடலாம். சாம்பார் (அ) கூட்டு செய்யும் போது இந்த பொடியை மேலே தூவி இறக்கலாம். வாசனையுடனும் நல்ல சுவையுடனும் இருக்கும்.

பலன்

இந்த பொடியை உபயோகப்படுத்துவதால் உடம்பிற்கு இரும்பு சத்து கிடைக்கும். உடம்பில் உள்ள இரத்தத்தை சுத்தம் செய்வதோடு இரத்தத்தை அதிகரிக்க செய்கிறது. இந்த பொடியுடன் பருப்பு சேர்த்து சாப்பிட்டால் இதயத்திற்கும், கல்லீரலுக்கும் நல்லது. பெண்களுக்கு முடி கொட்டும் பிரச்சனை தீரும்.

தாம்பூலம் பொடி

பொருட்கள்

சுக்கு, வால் மிளகு, சித்தரத்தை, ஓமம், அதிமதுரம், ஏலக்காய், கிராம்பு, ரோஜா மொக்கு, அரிசி திப்பிலி, ஜாதிக்காய், ஜாதிபத்திரி, பேரிச்சம்பழம், வெள்ளரி விதை, பூசணி விதை, நாட்டுச்சர்க்கரை மற்றும் அரிய வகை மூலிகைகள்.

உபயோகிக்கும் முறை

உணவிற்கு பின் அரை டீஸ்பூன் வாயில் போட்டு மென்று சாப்பிடவும்.

பலன்

எதிரில் வருபவர்களின் பார்வை திருஷ்டி மற்றும் பில்லி, சூன்யம் இவைகளை போக்கும். நடுவகிடில் எவ்வளவு நீளமாக குங்குமப் பொட்டுகளை வைக்கிறோமோ இவ்வளவிற்கும் கணவனின் ஆயுட்காலம் கூடும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.

திரிகடுகம்

பொருட்கள்

சுக்கு, மிளகு, திப்பிலி.

உபயோகிக்கும் முறை

100னீறீ பாலில் ஒரு டீஸ்பூன் (அ) இரண்டு டீஸ்பூன் திரிகடுகத்தை சேர்த்து மாலை வேளையில் பருகவும்.

பலன்

மூட்டு வலி, கை கால் வலி, கபம், வாதம், வரட்டு இருமல், சளி இவைகளை போக்கும். இருதய சுவாச தசைகள் சீராக இயங்க உதவுகிறது. கொழுப்பு சத்தை குறைக்கிறது. மத்திய நரம்பு மண்டலத்தை தூண்டி சிறுகுடல், பெருகுடலை சுத்தப்படுத்துகிறது.
TOP