1. மாப்பிளை சம்பா அரிசி / மாப்பிளை சம்பா குருணை

 • உடலை பலபடுத்தும் மாமருந்து.
 • திருமணதிற்கு தயாராகும் மணமகன்கள் தொடர்ச்சியாக 41 நாட்கள் இதன் நீராகாரத்தை உண்டு வந்தால் உடல் பலம் அதிகரிக்கும்.
 • மாப்பிள்ளை சம்பா என்ற பெயர் வந்தது குறித்து பாரம்பரியம் கூறும் தகவல் மிகவும் சுவராஸ்யமானது.
 • பழங்காலத்தில் ஒருவருக்கு பெண் கொடுப்பதற்கு முன்னர் அவர் பலசாலியா என்பதை சோதிப்பதற்காக அதிக எடை கொண்ட இளவட்டக் கல்லைத் தூக்க வேண்டும். அதைத் தூக்கும் இளைஞரை பலமுள்ளவனாகக் கருதி, அவருக்கு பெண்ணை திருமணம் செய்து கொடுப்பர். இந்த ரக அரிசியை சாப்பிடுவர்கள் எளிதில் இளவட்டக் கல்லை தூக்குவார்களாம். இதனால், இதற்கு மாப்பிள்ளை சம்பா என்று பெயர் ஏற்பட்டதாம்.
 • இந்த நெல் ரகம் ஆளுயரம் வளர்கிறது. இந்த அரிசியை சாப்பிடுவது நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை தரும் என்றும், அரிசி சாதத்தின் நீராகாரத்தை சாப்பிட்டால் நரம்புகள் பலப்படும் என்றும் வேளாண் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.

2. கருங்குறுவை அரிசி /கருங்குறுவை குருணை

 • இதன் நெல் கரு நிறம். அரிசி செந்நிறம். இது ஒரு மாமருந்து.
 • விரண தோல் நோய்களையும், குறிப்பிட்ட விஷத்தையும் போக்கும். யோக சக்தியையும் தரும்.
 • இந்த அரிசியுடன் மூலிகை மருந்து சேர்த்தால் லேகியம் செய்ய முடியும். அது யானைக்கால் நோய்க்கான மருந்து .
 • உடலை வலுவாக்கும் காயகல்ப சக்தி கொண்டது .
 • இந்த அரிசி ஒரு பங்கும், தண்ணீர் மூன்று பங்கும் சேர்த்து மண்பானையில் ஊரவைத்து ஆறுமாதம் கழித்து எடுத்தால் பால் போல் இருக்கும் . இதற்க்கு 'அன்ன காடி 'என்று பெயர் .இது காலராவிர்க்கானமருந்து.
 • இது கிரியா ஊ க்கியாக உள்ளது.
 • இந்த பாரம்பரிய அரிசி எதுவும் உரமோ, பூச்சி கொல்லி மருந்தோ இல்லாமலேயே வளரக்கூடியது.
 • மேற்காணும் அரிசி வகைகள் தானாக வளரக்கூடியது . தானே எதிர்ப்பு திறனுடன் வளர்வதால் இந்த அரிசியை உன்னுபவர்களுக்கும் அதே எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் வல்லமை கொண்டது.

3. ஜீரக சம்பா அரிசி

4. வெள்ளை பொன்னி அரிசி / வெள்ளை பொன்னி குருணை

5. நவரா அரிசி / நவரா குருணை

6. தேங்காய் பூ சம்பா

7. கருட சம்பா

8. இலுப்பை பூ சம்பா

9. பூங்கார்

10. கீர் கவுணி

11. பிபிடி

12. கிச்சடி சம்பா

13. கருப்பு உளுந்து

14. கருப்பு எள்ளு

15. வெள்ளை எள்ளு