We Work Together
கோ ரக்ஷனா சமிதி
நம் தினப்படி வாழ்வு முறையில் விவசாயத்தையும், கால்நடை வளர்ப்பையும் மீண்டும் கொண்டுவருவது நாட்டுக்கு நலம் பயப்பதாக இருக்கும். இன்றைய நிலவரத்தில், ஒன்றோடொன்று தொடர்புடைய இந்தச் செயல்களின் மூலம் நிலையான பொருளாதார அமைப்பைக் கட்டமைக்கவும் இது வழிகோலும்.
நம் ஆன்மிக அடையாளத்தை மீண்டும் நிலநாட்டுவதற்காகப் பல அருமையான ஆத்மாக்கள் புதுமையான பல முயற்சிகளை பாரதம் முழுக்க மேற்கொண்டுள்ளன. கோ ரக்ஷனா சமிதி (GRS) அவ்வாறான முயற்சியை மேற்கொண்டுள்ள ஒரு லாப நோக்கமற்ற அமைப்பு. இது தளர்ந்துபோன தன்னலமற்ற இந்த பசுக்களை அவற்றின் கடைசி காலத்தில் காப்பாற்றும் ஒரு முயற்சி. இதற்காக திருவாரூர் மாவட்டத்திலுள்ள குடவாசல் தாலுக்கா திருவீழிமிழலை கிராமத்தில் கோசாலை 2010ம் ஆண்டு அமைக்கப்பட்டது.
கோவிந்தபுரம் மஹாத்மா குருராஜர் விட்டல்தாஸ் மகராஜ்
கோசாலைக் கட்டுமானம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே, கோ ரக்ஷணா சமிதி உள்ளூரில் இருந்த வயதான, காயம்பட்ட மாடுகளுக்குச் சிகிச்சையளித்தும்,பேணிப் பாதுகாத்தும் தன் பணியைச் செவ்வனே செய்ய ஆரம்பித்திருந்தது. நலம் விரும்பிகளின் ஆதரவாலும், நன்கொடைகள் மூலமாகவும் ஜுன் 04, 2012இலிருந்து கோவிந்தபுரம் மஹாத்மா குருராஜர் விட்டல்தாஸ் மகராஜ் அவர்களின் ஆசிர்வாதத்தில் செயல்பட ஆரம்பித்துவிட்டது 30 பசுக்களோடு செயல்படத் தொடங்கிய இந்தக் கோசாலையில் தற்போது 120க்கும் மேலான பசுக்களும் காளைகளும் பராமரிக்க படுகின்றன.
Become a Go Sevak
Join us for a blissful life and blessings of Go-Matha..
Make a Donation of your Choice to Feed a Cow and Join Us and become a “Go-Sevak” and Get the blessings of Go-Matha and Almighty..